லிஸ்பன்: சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய கால்பந்து அணி தற்போது 108வது இடத்தில் நீடிக்கிறது.

கொரோனா காரணமாக, தற்போது பெரிய கால்பந்து தொடர்கள் எதுவும் நடைபெறவில்லை. கிளப் அளவிலான சில தொடர்கள், ரசிகர்கள் இல்லாமல் நடைபெறுகின்றன. பல போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. எனவே, அணிகளின் தரவரிசையில் மாற்றங்கள் இல்லாமல் நீடிக்கின்றன.

தற்போதைய நிலையில், சர்வதேச கால்பந்து தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி 108வது இடத்தில் நீடிக்கிறது.

பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் பிரேசில் ஆகிய அணிகள், முதல் 3 இடங்களில் உள்ளன. அதற்கடுத்த இடங்களில் முறையே, இங்கிலாந்து, உருகுவே, குரேஷியா, போர்ச்சுகல், ஸ்பெயின், அர்ஜென்டினா மற்றும் கொலம்பியா அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணி, 2022ம் ஆண்டின் உலகக்கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில், இந்தாண்டு அக்டோபர் 8ம் தேதி, கத்தார் நாட்டை எதிர்த்து ஆடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.