பாகிஸ்தானிலிருந்து  வந்த உளவுப்புறாவை விடுவிக்க கோரிக்கை

கடந்த அக்டோபர் 2-ஆம் தேதி பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி பறந்து வந்த புறா ஒன்றில் இந்திய பிரதமர் மோடிக்கு எதிராக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கடிதம் இருந்ததும் அந்த புறாவை பாதுகாப்பு படையினர் பிடித்துது வைத்திருந்தனர்.

spygion

அப்புறாவில் இருந்த கடிதத்தில் “மோடிஜி 1971-இல் இருந்த பாகிஸ்தானியர்கள் போல எங்களைக் கருத வேண்டாம், சிறுவரில் இருந்து பெரியவர் வரை அனைவரும் இந்தியாவுக்கு எதிராக போரிட தயாராக இருக்கிறோம்” என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது.

இந்திய பாதுகாப்பு படையினர் அந்த புறா மீண்டும் பாகிஸ்தானுக்கு பறந்து செல்லாதபடி அந்த புறாவின் இறகை துண்டித்தனர். இப்புறாவின் உடலினுள் வேறு ஏதேனும் சந்தேகத்துக்கிடமான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதா என்ற நோக்குடன் இந்த புறாவை எக்ஸ்ரே எடுத்து அதை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளனர்.

இப்போது இப்புறா மருத்துவமனையில் கூண்டில் வைக்கப்பட்டு உணவு கொடுக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.  பலரும் வந்து இப்புறாவை ஆர்வத்துடன் பார்த்துச் செல்லுகின்றனர்.

நீங்கள் புறாவின் இறகை துண்டித்தது உயிர்களுக்கு எதிரான வன்கொடுமை இல்லையா என்று சில செய்தியாளர்கள் வினவியபோது பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த இறகுகள் விரைவில் வளர்ந்துவிடும் அதன்பிறகு புறாவால் சிறப்பாக பறக்க இயலும் என்று பதிலளித்தனர்.

எக்ஸ்ரேவில் புறாவின் உடலில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் ஒன்றுமில்லை என உறுதிப்படுத்தியதும் புறாவை விடுதலையுடன் பறக்கவிட வேண்டும் என்று விலங்குகள் நல ஆர்வலர் கெளரி மெளலேகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.