இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு கொரோனா பாதிப்பு

க்னோ

பிரபல இந்திய முன்னாள் கிரிக்கட் வீரர் சேதன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

இந்திய கிரிக்கெட் அணியின் புகழ்பெற்ற ஆட்டக்காரர்களில் ஒருவரான சேதன் சவுகான் 1960 முதல் 1981 வரை இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றிருந்தார்.  இவர் 70களில் கவாஸ்கருடன் இணிஅந்து தொடக்க வீரராக விளையாடி உள்ளார்.

இந்த இருவர் ஜோடி பல போட்டிகளில் புகழ் பெற்று விளங்கி வந்தது.

சவுகான் டெஸ்ட் போட்டிகளில் 69 இன்னிங்க்ஸ்களில் 2084 ரன்கள் எடுத்துள்ளார்.    இவர் 1990 ஆம் வருடம் மக்களவையில் அமைச்சராக இருந்துள்ளார்.  தற்போது உபி மாநில அமைச்சர் பொறுப்பில் உள்ளார்.

 சேதன் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்ட்டுள்ளது.  இவர் லக்னோவில் உள்ள பி ஜி ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை  பெற்று வருகிறார்  தற்போது இவருக்கு 72 வயதாகிறது.

கார்ட்டூன் கேலரி