தோகா :

ர்வதேச கட்டிட மற்றும் மரத் தொழிலாளர்கள் சங்கத்தால் நிறுவப்பட்ட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர் அமைப்பின் – வெளிநாடு வாழ்  நண்பர்கள் நலச் சங்கம்  கத்தாரில் உள்ள பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது.

கத்தாரில் உள்ள அல்-ஜாபர் நிறுவனத்தில் பணிபுரியும் இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதற்கு முன் இந்திய பிரதமரின் “பி.எம். கேர் நிதி”க்கு (PM Care Fund) கோவிட்-19 க்காக ரூ .30,000  நன்கொடை வழங்கி இருந்தது.

இந்த அமைப்பை சேர்ந்தவர்கள்  தொழிலாளர்களுக்கு  காப்பீடு செய்துதருவது, இரத்த தானம் போன்ற பல்வேறு சமூக சேவைகளை தொழிலாளர்களுக்காக செய்துவருவது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக நிலவிவரும் அசாதாரண சூழலில் வாழும் தொழிலாளர் குடும்பங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, எண்ணெய், டீ தூள், பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி தொழிலாளர்கள் இடையே மனஉறுதியை அளித்துள்ளது.