துபாய் : ரூ 7 கோடி லாட்டரி பரிசு பெற்ற இந்தியர்

துபாய்

ந்தியர் ஒருவருக்கு துபாய் டூட்டு பிரீ லாட்டரியில் ரூ.7.34 கோடி ($10 லட்சம்) பரிசு கிடைத்துள்ளது.

 

துபாயில் டூட்டி பிரீ லாட்டரி டிக்கட் அதிக அளவில் விற்கப்படுகிறது. இதில் முதல் பரிசாக 10 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கப்படுகிறது. அத்துடன் இரண்டாம் பரிசாக பி எம் டபுள்யூ சொகுசு காரும் மூன்றாவது பரிசாக ரேஞ்ச் ரோவர் சொகுசுக் காரும் வழங்கப்படுகிறது.

இந்த லாட்டரியின் குலுக்கல் நேற்று நடந்துள்ளது. அதில் முதல் பரிசு இந்தியர் சௌரவ் தேவ் என்பவருக்கு கிடைத்துள்ளது. அவர் செப்டம்பர் மாதம் துபாயில் இருந்து கொல்கத்தா செல்லும் போது இந்த துபாய் டூட்டி பிரி லாட்டரி டிக்கட் வாங்கி உள்ளார். அதற்கு முதல் பரிசு கிடைத்துள்ளது.

சௌரவ் தேவ், “எனக்கு துபாய் டூட்டி பிரி லாட்டரி டிக்கட்டில் முதல் பரிசு கிடைத்ததை என்னால் நம்பவே முடியவில்லை. எனக்கு இந்த பரிசு ஒரு புதிய எதிர்காலத்தை அளிக்கும். அத்துடன் எனது குடும்பத்துக்கு மிகப் பெரிய நீண்டகால எதிர்காலத்தையும் அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.

இந்த லாட்டரியில் மற்றொரு இந்தியரான பாபு அஜித் பாபு என்பவருக்கு இரண்டாம் பரிசும் இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு மூன்றாம் பரிசும் கிடைத்துள்ளது.