கடலூரில் இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்: பாதுகாப்புத்துறை அமைச்சகம்

கடலூரில் வரும் ஜூன் 7ம் தேதி முதல் ராணுவத்திற்கான ஆள் சேர்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் வரும் ஜூன் 7ம் தேதி முதல் 17ம் தேதி வரை இந்திய ராணுவத்திற்கான ஆள் சேர்ந்து முகாம் நடைபெறவுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அண்ணா மைதானத்தில் இம்முகாம் நடைபெறவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், இம்முகாமில் பங்கேற்க விரும்புவோம் http://www.joinindianarmy.nic.in என்கிற தளத்தில் விண்ணப்பித்து, நுழைவு அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

முன்னதாக நெய்வேலியில் நடத்தப்படுவதாக இருந்த இம்முகாம், பல்வேறு அரசு நிர்வாக காரணங்களுக்காக கடலூருக்கு மாற்றப்பட்டுள்ளது குறுப்பிடத்தக்கது.