பேஸ்புக் தகவல் திருட்டு…சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு

டில்லி:

மக்களின் மனநிலையை அறிந்து அரசியல்வாதிகள் பிரசாரம் மேற்கொள்ளும் வகையில் பிரிட்டனைச் தலைமையிடமாக கொண்ட கேம்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மேற்கொண்டதாக செய்திகள் வெளியானது. அமெரிக்கா மட்டுமின்றி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் தேர்தல்களிலும் அனலிடிகா நிறுவனத்தின் பங்கு இருந்துள்ளது.

5.62 லட்சம் இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனமே கூறியுள்ளது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு, பேஸ்புக் மற்றும் அனாலிடிகா நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஏற்கெனவே நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்நிலையில் மத்திய தொலைதொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இன்று ராஜ்யசபாவில் பேசுகையில், இந்தியர்களின் தகவல் திருட்டு தொடர்பாக விளக்கம் கேட்டு கேம்ரிட்ஜ் அனலிடிகா நிறுவத்திற்கு மத்திய அரசு தொடர்சியாக அனுப்பிய பல நோட்டீஸ்களுக்கு அந்நிறுவனம் பதிலளிக்கவில்லை. இந்தியர்களின் தகவல்களை திருடியிருக்கலாம் எனும் சந்தேகம் எழுவதால் சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.