டில்லி

ந்திய அரசு நிறுவனங்கள், சுயச் சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்டவற்றுக்குச் சீன நிறுவனங்களில் இருந்து கொள்முதல் செய்யத் தடை விதித்துள்ளது.

இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கிடையில் எல்லைத் தகராறு தொடர்ந்து வருகிறது.    எல்லையில் முகாம் இட்டிருந்த சீனப்படைகள் கடந்த மாதம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.  சீனப்படைகள் இன்னும் லடாக் எல்லையில் முகாம் இட்டுள்ளதக கூறப்படுகிறது.   இதையொட்டி சீனா மீது இந்தியா பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

முதல் கட்டமாக டிக்டாக், யுசி பிரவுசர், ஹாலோ 59 சீனச் செயலிகள் தடை செய்யப்பட்டது.  அதன் பிறகு அரசு அனுமதியின்றி செய்யும் வெளிநாட்டு முதலீடுகள் குறிப்பாகச் சீன முதலீடுகளுக்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டது.   அத்துடன் அரசு தரப்புப் பணிகளுக்காகச் சீன நிறுவனங்களுடன் செய்யப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் ஒவ்வொன்றாக ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

தற்போது இந்தியாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிடம் இருந்து அரசுத் துறை மற்றும் சுயச்சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை வங்கிகள்,  நிதி நிறுவனங்கள் ஆகியவை பல உபகரணங்கள் கொள்முதல் செய்யத் தடை விதித்ஹ்டு இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  இவற்றில் டர்பைன், தொலி தொடர்பு உபகரணங்கள், காகிதம் உள்ளிட்ட எழுது பொருட்கள் போன்ற பொருட்கள் அடங்கும்.

இந்த கட்டுப்பாடுகள் தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.   இனி அளிக்கப்படும் அனைத்து கொள்முதல் ஒப்பந்தப் புள்ளிகளுக்கும் இவை பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த கட்டுப்பாடுகள் இந்திய எல்லையைப் பகிரும் நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும் இவை அனைத்தும் பொதுவாக சீனாவுக்காக மட்டுமே விதிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.