இஸ்லாமாபாத்: நரேந்திர மோடி அரசின் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்திய நாட்டின் அடிப்படையையே சிதைக்கும் இந்துத்துவ பாசிஸ மனப்பான்மையோடு கொண்டுவரப்பட்டுள்ளதுதான் இந்த மசோதா என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக இந்த மசோதாவை எதிர்க்கின்றன.

இந்நிலையில், இந்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அந்த மசோதா குறித்து தனது எதிர்ப்பை பதிவுசெய்துள்ளார்.

“குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவானது, சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகள் ஆகியவற்றுக்கு எதிரானது” என்று தனது டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.