புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக இந்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறது என்று கூறப்படும் நிலையில், பிபிஇ போன்ற அடிப்படையான விஷயங்களில் இந்திய அரசு நீண்ட உறக்கத்தில் இருந்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணம் என்று அழைக்கப்படும் பிபிஇ உள்ளிட்ட சில முக்கிய உபகரணங்களின் ஏற்றுமதிக்கு தடை விதித்து 19ம் தேதிதான் உத்தரவிட்டது மத்திய அரசு.

ஆனால், இதுபோன்ற அத்தியாவசிய உபகரணங்களுக்கு உலகளவில் தட்டுப்பாடு ஏற்படும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதியே எச்சரித்தது உலக சுகாதார அமைப்பான WHO. ஆனால், இந்திய அரசு மார்ச் 18ம் தேதிவரை விழித்துக்கொள்ளவில்லை.

முகக் கவசம், அங்கிகள், கண்ணாடிகள் மற்றும் சுவாசக் கருவிகள் உள்ளிட்டவற்றுக்கு உலகளவில் பற்றாக்குறை நிலவுகின்றன. அதுவும், இந்தியா போன்ற மிகு மக்கள்தொகையும், மிகு மக்கள் அடர்த்தியும் நிறைந்த இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்று மோசமானால், அத்தகைய உபகரணங்களுக்கு பெரும் தேவை ஏற்படும் என்ற புரிதல் சாதாரணமான ஒன்றே.

ஆனால், இந்திய அரசு அந்த உபகரணங்களை தேவையான அளவிற்கு தக்கவைத்து, பாதுகாத்து வைப்பதில் இவ்வளவு மெத்தனமாக இருப்பதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது.