அமெரிக்கா : இந்தியப் பலசரக்கு வர்த்தக மையத்தை $250000 அபராதத்துடன் இரு வாரத்துக்கு மூட உத்தரவு

வாஷிங்டன்

விலை உயர்வு விதி மீறலை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள இந்தியப் பலசரக்கு வர்த்தக மையமான படேல் பிரதர்ஸ் 250000 $ அபராதத்துடன் இரு வாரத்துக்கு மூடப்பட உள்ளது.

அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய பல சரக்கு வர்த்தக மையமான படேல் பிரதர்ஸ் ஒரு இந்திய நிறுவனம் ஆகும்.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாகப் பல பொருட்களுக்குக் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

நியு ஜெர்சியில் உள்ள இவர்களுடைய வர்த்தக நிறுவனத்தில் பொருட்களின் விலைகள் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டது.

இவ்வாறு அரசின் விலை உயர்வு கட்டுப்பாடு விதிகளை மீறியதால் இந்த நிறுவனம் இரு வாரங்களுக்கு மூடப்பட உள்ளது.

மேலும் இந்த நிறுவனத்துக்கு $250,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனம் அமெரிக்காவில் இயக்கும் அத்தனை கடைகளும் இன்று முதல் இரு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும்.