கோவாவில் ,இந்திய சர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டபடி நடைபெறும்! முதல்வர் பிரமோத் சாவந்த்

பனாஜி: கோவாவில்  சர்வதேச திரைப்பட விழா திட்டமிட்டபடி நடைபெறும் என மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துஉள்ளார்.

இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI), இந்திய அரசின் திரைப்படத்துறையால் சர்வதேச திரைப்பட விழா  நடத்தப்பட்டு வருகிறத. இந்த விழா கடந்த 1952-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தப்பட்ட வருகிறது. மும்பை, டெல்லி உள்பட பல மாநிலங்களில் இந்த விழா நடைபெற்றுள்ள நிலையில், நடப்பாண்டில் கோவால் நடத்தமுடிவு செய்யப்பட்டது.

அதன்படி, 51-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா கோவாவில் நவம்பர் 20 முதல் 28 வரை நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்திருந்தார். ஆனால், கொரோனா காரணமாக குறிப்பிட்ட நாட்களில் விழா நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில்,  இந்தியாவின் சர்வதேச திரைப்பட விழா 2020 திட்டமிட்டபடியே விழா நடைபெறும் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் அறிவித்துள்ளார். மேலும், விழாவின்போது,  தகவல் மற்றும் ஒளிபரப்புக்கான மத்திய அமைச்சகம் வழங்கிய அனைத்து  வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படும் எனவும் தெரிவித்து உள்ளார்.