இந்திய பத்திரிகையாளர் ரவிஷ்குமார் ரமோன் மகசேசே விருது பெற்றார்!

டப்பு ஆண்டுக்கான (2019) ரமோன் மகசேசே விருது கடந்த மாதம் (ஆகஸ்டு) 2ந்தேதி அறிவிக்கப்பட்டது. இந்த விருருதுக்கு இந்தியப் பத்திரிகையாளரும் என்டிடிவி நெறியாளருமான ரவிஷ்குமார் உள்பட 5 பேருக்கு  வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று பிலிப்பைன்ஸின் கலாச்சார மையத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்  ஆசியாவின் உயரிய விருதான மகசேசே விருதை இந்திய பத்திரிகையாளர் ரவிஷ்குமார்  பெற்றுக்கொண்டார். அவருடன் மற்ற 4 பேரும் விருது பெற்றனர்.

இந்தநிகழ்வில்  பிலிப்பைன்ஸ் நாட்டின்  துணை ஜனாதிபதி லெனி ராபிரெடோவும் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார்.

ரவிஷ்குமாருக்கு “தொழில்முறை, நெறிமுறை இதழியல் மீதான மிக உயர்ந்த பண்பு,   குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்கும் அவருடைய உண்மை,  உறுதி, சுதந்திரத் தன்மை, துணிச்சல், ஜனநாயகப் பொறுப்பு ஆகியவற்றுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.

பிலிப்பைன்ஸ் நாட்டின் புகழ்பெற்ற அதிபராக விளங்கியவர் ரமோன் மகசேசே. 1957 ஆம் ஆண்டில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தார். அவரது நினைவாக இந்த விருது  ஆண்டு தோறும்  வழங்கப்படுகிறது.  ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு  இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.