ஜொகன்னஸ்பர்க்: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்ப‍ை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய இளம் அணி.

காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்திய அணி, 74 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்கள் மற்றும் நடுக்கள வீரர்கள் சோபிக்கவில்லை. அதேசமயம், ஜெய்ஸ்வால் (62 ரன்கள்) மற்றும் சித்தேஷ் (25 ரன்கள்) எடுத்தனர்.

பின்வரிசையில் அதர்வா 55 ரன்களை விளாச, பிஷ்னாய் 30 ரன்களை எடுத்ததன் மூலம், இந்திய அணி ஒருவழியாக 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 233 ரன்களைத் தொட்டது.

பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் நிலைமையோ வேறுமாதிரியாக இருந்தது. துவக்கத்தில் 17 ரன்களுக்கே 4 விக்கெட்டுகளை இழந்தது.

அந்த அணியின் பான்னிங்(75 ரன்கள்) மற்றம் ஸ்காட்(35 ரன்கள்) ஆகியோர் நம்பிக்கை அளித்தாலும், மற்றவர்கள் கைவிட்டதால், அந்த அணியின் தோல்வி உறுதியானது.

இறுதியில், 43.3 வரை தாக்குப்பிடித்த ஆஸ்திரேலிய அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் மட்டுமே எடுத்து, 74 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. இந்திய ஜூனியர் அணி, உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறுவது இது 7வது முறையாகும்.