ஜொகன்னஸ்பர்க்: 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி ஜுனியர் உலகக்கோப்ப‍ை போட்டியில் காலிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி.

19 வயதுக்குட்பட்டோருக்கான ஜுனியர் உலகக்கோப்பையில் தற்போது இந்தியாதான் சாம்பியன். இப்போட்டித் தொடரில் மொத்தம் 16 அணிகள் கலந்துகொள்கின்றன. இதில் ஜப்பானும் ஒரு அணி.

தனது முதல் போட்டியில் இலங்கையை வென்ற இந்தியா, இரண்டாவது போட்டியில் ஜப்பானை சந்தித்தது. தனது 36 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக உலகக்கோப்பை நிலையிலான கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற ஜப்பான் அணி, அதற்கு தகுதியில்லாதது என்பதைப் போலவே ஆடியது.

ஆம், முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, மொத்தமாக வெறும் 41 ரன்களுக்கெல்லாம் சுருண்டுவிட்டது. இதில் இன்னொரு கொடுமையான சுவாரஸ்யம் என்னவெனில், அந்த 41 ரன்களில் 19 ரன்கள் ஓசியாக கிடைத்தவை.

பின்னர், இந்தக் கடினமான(!) இலக்கை எட்டுவதற்கு பேட்டிங் செய்யத் தொடங்கிய இந்திய அணி, 4.5 ஓவர்களில் 42 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று காலிறுதிக்கு தகுதிபெற்றது.