ல்சாத், குஜராத்

குஜராத்தில் வசிக்கும் ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு வெளிநாட்டில் வசிக்கும் அவர் கணவர் வாட்ஸ்அப் மூலம் முத்தலாக் அளித்தற்காக வழக்கு பதியப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில் உள்ள சஞ்சான் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியப் பெண் ஃபர்ஹிம் என்பவரின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருகிறார்.   இவரது கணவர் பெயர் ஜைலுன் காலியா அகும்.   ஜைலூன் காலியவின் சகோதரிக்கு வெகுநாட்களாக குழந்தைகள் இல்லாமல் இருந்துள்ளது.  இதனால் தங்கள் மகனை சகோதரிக்கு அளிக்க காலியா விரும்பி உள்ளார்.

இதற்கு ஃபர்ஹிம் ஒப்புக் கொள்ளவில்லை.   அதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.   அப்போது காலியா தனது மனைவியை விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டி உள்ளார்.  ஆயினும் ஃபர்ஹிம் குழந்தையை அளிக்க மறுத்துள்ளார்.   வெளிநாடு சென்ற காலியா வாட்ஸ் அப் மூலம் மும்முறை தலாக் மெசேஜ் அனுப்பி உள்ளார்.

அதன் பிறகு தனது பெற்றோருக்கு இந்த விவாகரத்து ஆவணத்தை அனுப்பி உள்ளர்.  பெற்றோர்களான  ஜாவீத் மற்றும் நஃபீசா ஆகியோர் இதை ஒரு பிரிண்ட் அவுட் எடுத்து உள்ளூர் மசூதியில் அளித்து ஃபர்ஹிம் ஐ விவாகரத்து செய்வித்துள்ளனர்.  இதை எதிர்த்து ஃபர்ஹிம் தனது கணவர் மாமியார் மற்றும் மாமனார் மீது புகார் அளித்துள்ளார்

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் காலியா மீதும் அவரது பெற்றோர் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.  இது குறித்து காவல்துறையினர், “ அந்த பெண்ணின் கணவர் எங்கு இருக்கிறார் என்பதை சரியாக கண்டறிய முடியவில்லை.   அந்தப் பெண் கனடாவில் இருப்பதாக சொல்லும்போது பெற்றோர்கள் அவர் துபாயில் உள்ளதாக கூறுகின்றனர்.” என தெரிவித்துள்ளனர்.