உறங்கும் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த இந்திய விமானப் பயணி

வாஷிங்டன்

னைவி அருகில் இருக்கும் போதே அருகில் உறங்கும் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த இந்திய விமானப் பயணி தண்டிக்கப்பட உள்ளார்.

 

                                                                 மாதிரி புகைப்படம்

அமெரிக்க நாட்டில் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான் டெட்ராயிட்டில் பிரபு ராமமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார்.   சுமார் 35 வயதான இவர் ஒரு அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் மேலாளராக பணி புரிகிறார்.   கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவர் தன் மனைவியுடன் லாஸ் வேகாஸ் நகரில் இருந்து டெட்ராய்ட் செல்லும் விமானத்தில் பயணம் செய்தார்.

பிரபு ராமமூர்த்தி

அப்போது ஜன்னல் ஓர இருக்கையில் ஒரு பெண் அமர்ந்து அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.    அவர் அருகில் பிரபு ராமமூர்த்தியும் அதற்கும் அடுத்தாற்போல் அவர் மனைவியும் அமர்ந்துக் கொண்டிருந்தனர்.   உறங்கிக் கொண்டிருந்த பெண் திடீரென தனது மேல் சட்டை மற்றும் கால்சட்டை அவிழ்க்கப் பட்டு ராமமூர்த்தி அவரை தவறான இடங்களில் தடவிக் கொண்டிருப்பதை உணர்ந்து விழித்தார்.

உடனடியாக அந்தப் பெண் அங்கிருந்த விமானப் பணியாளர்களிடம் புகார் அளித்தார்.    பிரபு ராமமூர்த்தி விமான நிலைய காவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வழக்கு பதியப் பட்டது.    பிரபு அதை முதலில் மறுத்துள்ளார்.   தாம் உறக்கத்தில் இருந்ததாகவும் தவறிப்போய் கை பட்டிருக்கலாம் எனவும் கூறினார்.

ஆயினும் விடாமல் அரசு வழக்கறிஞர் செய்த குறுக்கு விசாரணையில் அந்தப் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்ததை பிரபு ஒப்புக்கொண்டார்.    நீதிபதி அவரை குற்றவாளி என அறிவித்து வரும் டிசம்பர் மாதம் 12ஆம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளார்.   மேலும் இந்த சம்பவம் குறித்து தைரியமாக புகார் அளித்த அந்த பெண்ணை நீதிபதி பாராட்டி உள்ளார்.

பிரபு ராமமூர்த்திக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை கிடைக்கலாம் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

You may have missed