அமெரிக்கா: கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக்கொலை!

வாஷிங்டன்:

மெரிக்காவில் முகமூடிக் கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த பஞ்சாபை சேர்ந்த இந்திய இளைஞர் ஒருவர், முகமூடி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கொல்லப்பட்ட இந்திய இளைஞர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டனில் யாகிமா நகரில் இருக்கும் பெட்ரோல் விற்பனை நிலையத்துடன் சேர்ந்திருக்கும் கடையில் கிளார்க்காக விக்ரம் ஜர்யால் (26) என்பவர் பணிபுரிந்து வந்தார்.

கடந்த வியாழக்கிழமை முகமூடி அணிந்த வந்த இரண்டு பேர் அந்த கடையினுள் புகுந்து கொள்ளையடித்தனர். இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கொள்ளையர்களில் ஒருவர் ஜர்யாலை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பினர்.

இதையடுத்து அவரை உடனடியாக அருகிலிருந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

முகமூடி நபர்கள் பணத்தை கொள்ளையடிக்கும் விடியோ காட்சிகள், அங்கிருக்கும் ரகசிய காமராவில் பதிவாகியுள்ளது. இதை அடிப்படையாகக் கொண்டு, கொள்ளையர்கள் 2 பேரை அமெரிக்க காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ஜர்யால்ப ஞ்சாப் மாநிலம், ஹோசியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அமெரிக்காவுக்கு கடந்த ஒரு மாதத்துக்கு முன்புதான் வேலைக்கு சென்றார் என்று அவரது  சகோதரர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா, இந்த சோகமான சம்பவத்துக்கு அனுதாபம் தெரிவித்துக்கொள்வதாகவும், அவரது உடலை இந்தியா கொண்டு வர ஆவன செய்வதாகவும் கூறியுள்ளார்.