துபாய்:

அபுதாபியில் நடந்த சிறப்பு குலுக்கலில் இந்தியர் ஒருவருக்கு 1.9 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக கிடைத்துள்ளது.

மானேகுடி வார்கே மேத்யூ என்ற அவர் 7 தொடர்களை கொண்ட 183 என்ற பிக் டிக்கெட்டை அபுதாபியில் வாங்கியிருந்தார். இந்த டிக்கெட்டுக்கு ஜாக்பாட் என்ற பம்பர் பரிசு கிடைத்துள்ளது. 7 மில்லியன் திராம் (1.9 மில்லியன் அமெரிக்க டாலர்) வென்றுள்ளார் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

கேரளாவை சேர்ந்த மேத்யூ மட்டுமின்றி மேலும் 6 இந்தியர்கள் மற்றும் ஒரு எமிரேத்தி தலான ஒரு லட்சம் திராம் வென்றுள்ளனர். கடந்த மாதம் கிருஷ்ணம் ராஜூ தொகாசிசு என்ற இந்தியர் அபுதாபியில் 5 மில்லியன் திராம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.