Random image

இந்தியில் எம்பிபிஎஸ் கல்விக்கு நோ சொன்ன மருத்துவ கவுன்சில்

டில்லி

ந்தி மொழியில் மருத்துவக் கல்வி தொடங்க அனுமதி அளிக்க இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் அடல் பிகாரி வாஜ்பாய் இந்திப் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.  க்டந்த 2011 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இந்தி மொழியில் பாடங்கள் கற்பிக்கப்படுகிறது.  இந்தியில் மருத்துவப் பட்டப்படிப்பு கல்வி தொடங்க இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பல்கலைக்கழகம் அனுமதி கோரி இருந்தது.

அவ்வாறு இந்தியில் மருத்துவ பட்டப் படிப்பு கல்வி தொடங்க இந்திய மருத்துவ கவுன்சில் மறுத்துள்ளது.  இது குறித்து அந்த கவுன்சில் அதிகாரி ஒருவர், “இந்தியில் மருத்துவக் கல்வி தொடங்க அனுமதி அளித்தால் தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அனுமதி கோரப்படும்.  மருத்துவக் கல்வி என்பது சர்வதேச அளவில் உள்ளதால் ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது என கவுன்சில் முடிவு எடுத்துள்ளது.

இந்தியா முழுவதிலும் உள்ள 450 மருத்துவக் கல்லூரிகளில் 150 மட்டுமே இந்தி பேசும் மாநிலங்களில் அமைந்துள்ளன.  எனவே இவ்வாறு அனுமதி அளிப்பது இந்தி பேசாத மாநிலங்களுக்கு பிரச்னையை உண்டாக்கும்.   மருத்துவப் படிப்பு என்பது பொதுவாக ஆங்கிலத்தில் உள்ள நேரத்தில் அதை பிற மொழிகளில் மொழி பெயர்ப்பதில் ஒரு சிறு தவறு நடந்தாலும் அது விபரீதம் ஆகி விடும்.என கூறி உள்ளார்.