சென்னை,
ந்தியமுறை மருத்துவ படிப்புக்கு நாளை ( 5ந்தேதி)  கவுன்சலிங் தொடங்கப்படுகிறது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள  அறிஞர் அண்ணா சித்த மருத்துவக்கல்லூரியில் கவுன்சிலிங் நடைபெறுகிறது.
இந்திய முறை மருத்துவமான, சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, யோகா மற்றும் நேச்சுரோபதி மற்றும் ஹாமியோபதி இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு நாளை கவுன்சிலிங் நடைபெறுகிறது.

தமிழகத்தில் உள்ள 6 அரசு இந்தியன் முறை  மருத்துவகல்லூரிகளில் 356 இடங்களும் 21 தனியார் மருத்துவகல்லூரிகளில் ஆயிரம் இடங்களும் உள்ளன.
இதில் சேர 6 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர்.  ஆனால் ரேங்க் பட்டியல், கவுன்சலிங் தேதிக்காக கடந்த 3 மாதங்களாக மாணவர்கள் காத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி, 5 ஆயிரத்து 468 பேர் அடங்கிய ரேங்க் பட்டியல் மருத்துவகல்வி இயக்கக இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதுதொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘முதல்கட்ட கவுன்சலிங் வரும் 5ம் தேதி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள 2 ஆயிரத்து 830 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடர்பான அறிவிப்புகளை மாணவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்’ என்றார்.
அனைத்து, மருத்துவம், என்ஜினியரிங், ஆர்ட்ஸ் கல்லூரிகளில் வகுப்புகள் ஆரம்பம் ஆகி ஒரு செமஸ்டர் முடிந்துள்ள நிலையில், இந்தியன் முறை மருத்துவத்துக்கு தற்போதுதான் கவுன்சிலிங் குறித்து அழைப்பு வந்துள்ளது,  மாணவர்களிடையேயும், பெற்றோர்களிடேயும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதில், இடம் கிடைக்காத மாணவர்கள், தற்போது வேறு கல்லூரிகளுக்கும் சென்று சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மாணவர்களின் ஒரு வருட படிப்பு வீணாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடுவதை அரசு தவிர்க்க வேண்டும் என கவுன்சிலிங்-காக காத்திருக்கும் மாணவி ஒருவர் கூறினார்.
இனி வரும் காலங்களிலாவது,  எம்.பி.பி.எஸ்.படிப்புக்கு கவுன்சிலிங் முடிந்தவுடன் இந்திய மருத்து வத்துக்கும் கவுன்சிலிங் நடைபெற நடவடிகை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்ததார்