சர்வதேச தரவரிசை – நான்காமிடத்தில் நீடிக்கும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி!

புதுடெல்லி: சர்வதேச ஹாக்கி தரவரிசைப் பட்டியலில், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி, நான்காவது இடத்திலேயே நீடிக்கிறது.

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

கொரோனா காரணமாக பல்வேறு போட்டித் தொடர்கள் தடைபட்ட நிலையில், இந்த தரவரிசைப் பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 2063.78 புள்ளிகளுடன் இந்திய அணி நான்காமிடத்தில் இருக்கிறது.

முதல் இடத்தில் 2496.88 புள்ளிகளுடன் பெல்ஜியம் முதலிடத்திலும், 2385.70 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாமிடத்திலும், 2257.96 புள்ளிகளுடன் நெதர்லாந்து மூன்றாமிடத்திலும் வருகின்றன.

அதேசமயம், இந்தியப் பெண்கள் அணி 1543.09 புள்ளிகளுடன் 9வது இடத்தில் நீடிக்கிறது இந்தியப் பெண்கள் ஹாக்கி அணி.