ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கு புயல் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம்

டில்லி:

மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாகி உள்ளதால், ஆந்திர பிரதேசம் மற்றும் ஒடிசா மாநிலத்துக்கு இந்திய வானிலை மையம்  புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக  அடுத்த 24 மணி நேரத்திற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையோர மக்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என  வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் ஒடிசாவை ஒட்டியுள்ள கடற்கரை பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று தீவிரக்காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, தற்போது புயலாக உருவாகியுள்ளது. இந்த புயலானது  வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து  கலிங்கபட்டிணம் கேபால்பூர் இடையே இன்று கரையை கடக்கும் என எதிர்பார்ப்பதாகவும், அப்போது, மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்தில்  காற்கு வீசக்கூடும்  இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் காரணமாக முன்னெச்சரி்க்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  கடற்கரை கரையோர கிராம மக்கள்  அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த புயல் ஆந்திராவை தொடர்ந்து ஒடிசா கடற்கரை பகுதியையும் தாக்கும் என அஞ்சப்படுகிறது. அதையடுத்து ஒடிசாவின், கஞ்சாம், கோர்தா, நயகார்க், பூரி, கணபதி  மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்து முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் மாவட்ட நிர்வாகங்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.