Random image

இன்று ரூ. 72.63: தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு!

டில்லி:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இன்று ரூ.72.63 காசாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது பொருளாதார வல்லுநர்களை கவலையடைய செய்துள்ளது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பிரச்சினைகளால் கடந்த சில நாட்களாக நாட்டின் பொருளாதார நிலை  கீழ்நோக்கியே பயணித்து வருகிறது. இது பொருளாதார நிபுணர்களிடையே கவலையை எற்படுத்தி உள்ளது.

துருக்கி நாட்டின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாயின் மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 72.63-ஆக வீழ்ச்சி யடைந்துள்ளது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து, கடந்த மாதம் துவங்கி ரூ.70-னை தான்டியது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் துவங்கியதும் அமெரிக்க டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியுடன் துவங்கியது. தற்போதைய நிலவரப்படி டாலருக்கு நிகராண இந்திய ரூபாயின் மதிப்பு 72.50-ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. முன்னதாக இன்று காலை 72.63-ஆக வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது நமது நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என பொருளாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.