கேரள வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய இந்திய கேப்டன்களுக்கு விருது வழங்கி கவுரவித்தது சிங்கப்பூர்!

--

சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றிய கப்பல்படை கேப்டன்களை பாராட்டி சிங்கப்பூர் அர்சு விருது வழங்கி கவுரவித்துள்ளது.

navy

சமீபத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பொழிந்ததால் கேரள மாநிலமே வெள்ளத்தில் தத்தளித்தது. கிட்டத்தட்ட 13 மாவட்டங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டன. மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதால் அவைகள் திறந்து விடப்பட்டன.

ஆங்காங்கே வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டனர். பாதிக்கபப்ட்ட மக்களை மீட்கும் பணியில் முப்படைகளும், மீனவர்களும் ஈடுபட்டனர். இந்நிலையில் ஆலுவா செங்கமனநாடு என்ற இடத்தில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் வெள்ளத்தில் தவித்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டார். அவரை கப்பல்படை கேப்டன்கள் விஜய் வர்மா மற்றும் ராஜ்குமார் பாதுகாப்பாக மீட்டனர்.

kerala

அதன்பிறகு மீட்கப்பட்ட அந்த பெண்ணிற்கு அடுத்த நாளே ஆரோக்கியத்துடன் பெண் குழந்தை பிறந்தது. இதேபோல் வெள்ளத்தில் சிக்கி தவித்த 26 பேரை கேப்டன்கள் இருவரும் உயிரை பணயம் வைத்து காப்பாற்றினர்.

இந்நிலையில் விஜய் வர்மா மற்றும் ராஜ்குமாரின் வீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசு அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து உள்ளது. சிங்கப்பூரில் நடந்த ”ஆசியன் ஆப் தி இயர்” என்ற நிகழ்ச்சியில் இருவருக்கும் விருது வழங்கப்பட்டது.