புதுடெல்லி:
ங்காள விரிகுடாவில் இந்திய மட்டும் மற்றும் ரஷ்ய கடற்படையினர் செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் பெருமளவில் ஒரு ராணுவ பயிற்சியை நடத்த உள்ளனர். இந்த கடற்படை பயிற்சியின் ஒரு பகுதியாக மேற்பரப்பு மற்றும் வான்வழி இலக்குகளில் துப்பாக்கிச் சூடு மற்றும் கண்காணிப்பு பயிற்சிகள் போன்ற ஏராளமான பயிற்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
கிழக்கு லடாக்கில் சீனாவுடன் இந்தியா கடுமையான எல்லைப் போரில் ஈடுபட்டுள்ள நேரத்தில் இந்த பயிற்சிகள் நடைபெறுகின்றன.
ஜூலை மாதம் இந்திய கடற்படையினர் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் அமெரிக்க கடற்படை குழுவுடன் ராணுவ பயிற்சியை மேற் கொண்டது. அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் நிமிட்ஸ் உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலாகும்.
தற்போது நடக்கவிருக்கும் இந்த பயிற்சி முன்னர் ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் இல் நடைபெற இருந்தது, ஆனால் கொரோனா தொற்று காரணமாக இது தள்ளி வைக்கப்பட்டது. ரஷ்யாவின் கடற்படை கப்பல்கள், கடற்படை அதிகாரிகள், மற்றும் ஹெலிகாப்டர்கள் இந்த பயிற்சியில் கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கடற்படை பயிற்சியானது இந்திய கடற்படை மற்றும் ரஷ்ய கடற்படை இடையிலான நட்பு மற்றும் நம்பிக்கையின் அளவை காண்பிக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரஷ்ய கடற்படை கப்பல்கள் நாளை இலங்கையிலுள்ள ஹம்பன்டோட்டா என்ற துறைமுகத்தை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடற்படை பயிற்சிகள் 2005ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்திய கடற்படை ஜூன் மாதத்தில் ஜப்பானிய கடற்படையுடன் இதே போன்ற பயிற்சிகளை மேற்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.