டெல்லி, அரியானா, பஞ்சாப் மாநிலங்களுக்கு இலவச ஆக்ஸிஜன்: இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி, அரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இலவச ஆக்ஸிஜன் வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முன்வந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது.

ஒருசில மாநிலங்களிலுள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

இந் நிலையில் டெல்லி, பஞ்சாப், அரியானா ஆகிய 3 மாநிலங்களில் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை தர 150 மெட்ரிக் டன் இலவச ஆக்ஸிஜன் வழங்குவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.