இங்கிலாந்து நிதி அமைச்சராக இந்தியர்: யார் இந்த ரிஷி சூனக்…!

லண்டன்:

பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், பிரபல சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத் தலைவர்  நாராயண மூர்த்தியின் மருமகனு மான ரிஷி சூனக்-க்கு (Rishi Sunak) நிதி அமைச்சர் பதவி கொடுத்து கவுரவப்படுத்தி உள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சனுடன் ரிஷி

பஞ்சாப் மாநிலம்:

ரிஷி சூனக் தற்போது போரிஸ் ஜான்சனின் கன்சர்வேடிவ் கட்சியின் எம்.பி.யாக இருந்து வருகிறார்.  அரசியல் வாதியான  ரிஷி சூனக்-கின் தாத்தா பாட்டி, இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.  அவர்கள், 1960களில் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்ததாக கூறப்படுகிறது.

ரிஷி சூனக்-கின் தந்தை  யஷ்வீர் அங்கு பொது மருத்துவராக பணியாற்றினார். தாயார், உஷா சூனக், உள்ளூரில் மருந்து கடை நடத்தி வந்தாகவும் கூறப்படுகிறது. இந்த தம்பதிகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்தவர்தான்  ரிஷி சூனக்.

கல்வி

1980ம் ஆண்டு  மே 12ந்தேதி  அன்று ஹாம்ப்ஷயரின் சவுத்தாம்ப்டனில் பிறந்த ரிஷி,  அங்கு ஆரம்பக் கல்வி பயின்றதாகவும், பின்னர்,  ஆக்ஸ் போர்டில் உள்ள லிங்கன் கல்லூரியில் தத்துவம், அரசியல் மற்றும் பொருளாதாரம் (பிபிஇ) படித்தார், பின்னர் அங்குள்ள  ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.

பின்னர், அங்குள்ள முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாச்ஸின் ஆய்வாளராக பணியாற்றினார்.

அதைத்தொடர்ந்து, தெலெம் பார்ட்னர்ஸில் மற்ற முன்னாள் நண்பர்களுடன் சேர்ந்து, புதிய ஹெட்ஜ் நிதி நிறுவனம் 700 மில்லியன் டாலர் முதலீட்டுடன அக்டோபர் 2010ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில், இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் மேனேஜ்மென்ட் டில் பணியாற்றினார், பின்னர், செப்டம்பர் 2006 இல் அதே நிதி நிறுவனத்தில் ஒரு பங்காளராக ஆனார். நவம்பர் 2009 அந்த நிறுவனத்தில் இருந்து  வெளியேறினார்.

அதைத்தொடர்ந்து, இந்திய தொழிலதிபர் என். ஆர். நாராயணமூர்த்தியின் மனைவிக்கு சொந்தமான முதலீட்டு நிறுவனமான கட்டமரன் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் இயக்குநராகவும் இருந்தார்.

அரசியல் 

அரசியலில் ஆர்வம் கொண்ட ரிஷி கன்சர்வேடிவ் கட்சி வேட்பாளராக ரிச்மண்டின் (யார்க்ஸ்)  கடந்த 2014ம் ஆண்டு முதன்முதலாக  தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த இடம் ஏற்கனவே கன்சர்வேடிவ்  கட்சியின் முன்னாள் தலைவரும் வெளியுறவு செயலாளரு மான வில்லியம் ஹேக் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அதைத்தொடர்ந்து 2015ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு 19,550 (36.2%) வித்தியாசத்தில்  வெற்றிபெற்று எம்.பி.யானார்.

அதையடுத்து  சுற்றுச்சூழல், உணவு மற்றும் கிராம விவகாரங்கள் தேர்வுக் குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த பதவியில் 2015−2017 ஆண்டுகள் வரை பணியாற்றினார்.

மனைவி குழந்தைகளுடன் ரிஷி

இதற்கிடையில், ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் இருந்து விலகுவ தாக இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தீர்மானம் செய்து, பிரக்சிட் ஒப்பந்தம் குறித்து விவாதித்தார். இதற்கு அவருடைய அமைச்சரவை யிலே கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர்,  ஜூன் 2016ம் ஆண்டு நடைபெற்ற  உறுப்பினர் வாக்கெடுப்பில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து (EU) வெளியேறுவதில் தெரேசாமேக்கு ஆதரவாக தோள் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து, 2017ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு மீண்டும்  எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு உள்ளாட்சி நிர்வாகத்தின் நாடாளுமன்ற செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது, பிரதமர் தெரேசா மேவின் பிரெக்சிட் திரும்பப் பெறும் ஒப்பந்தத்திற்கு சுனக் வாக்களித்தார்.

பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு கடந்த ஆண்டு (2019) மீண்டும் பொதுத்தேர் தல் நடத்தப்பட்டது.   இந்த தேர்தலில் போட்டியிட்ட சூனக்   27,210 (47.2%) வாக்குகள் வித்தியாசத்தில் பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் சூனக்-குக்கு கருவூலத்தின் தலைமை செயலாளராக பதவி வழங்கி கவுரவித்தார். இந்த நிலையில், தற்போது நாட்டின் நிதி அமைச்சராக நியமித்து அழகு பார்த்துள்ளார்…

பிரிட்டிஷ் கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த  அரசியல்வாதியும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான ரிஷி சூனக்  இன்று இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

 இன்போசிஸ் நாராயணமூர்த்தி  தம்பதியுடன் ரிஷி தம்பதி

ரிஷி சூனக் குடும்ப வாழ்க்கை:

இங்கிலாந்தின் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ள ரிஷி சூனக் மனைவியின் பெயர் அஷ்சதா மூர்த்தி. இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியின் மகள். இவர்கள் ஸ்டான்ஃபோர்டு யுனிவர்சிட்டியில் படிக்கும்போது ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டனர். இவர்களது திருமணம்  காதல் மற்றும் அரேஞ்சுடு மாரேஜ்.  2009ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இவர்களுக்கு இனிதே திருமணம் நடைபெற்றது.  ரிஷி சூனக் தம்பதிகளுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கார்ட்டூன் கேலரி