லண்டன்: 

ந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், அயர்லாந்து நாட்டின் பிரதமர் ஆகிறார்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வரத்கர் அயர்லாந்து நாட்டில் பிரபல மருத்துவராக விளங்குகிறார். இவரது தந்தை மும்பையைச் சேர்ந்தவர். தாயார் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர்.

வரத்தர் அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தற்போது அவர்,  அயர்லாந்தின் ஆளும் கட்சியான பைன் கேயல் கட்சியை தலைவர் பொறுப்பிற்கான தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து  அயர்லாந்தின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பினை பெற்று உள்ளார். வரத்தருக்கு வயது 38.    அயர்லாந்தின் இளம் பிரதமர் என்ற பெருமையும் அவர் பெற உள்ளார்.

இது குறித்து பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த பின்னர் அயர்லாந்தின் பிரதமராக பொறுப்பேற்பார்.

.
கட்சியின் மூத்த தலைவர்கள் இருவரின் ஆதரவு கிடைத்ததால் 60 சதவீத வாக்குகளைப் பெற்று உள்துறை அமைச்சருக்கு எதிராக வெற்றி பெற்று கட்சியின் 11-வது தலைவராக வரத்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அயர்லாந்தின் பிரதமராக இருந்த என்டா கென்னி தனது பதவியை 2017 தொடக்கத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து, பிரதமர் பதவி காலியாக உள்ளது. இந்நிலையில், வரத்கர் பிரதராக பொறுக்கேற்க உள்ளார்.

வரத்கர் ஓரினச் சேர்க்கையில் ஈடுபாடு உடையவர். இது போல ஓரினச்சேர்க்கையாளர் பிரதமராவதும் இதுவே முதல் முறை.