Random image

லண்டனில் இன வெறுப்பு: இந்திய வம்சாவழி குடும்பத்தினரை எரித்து கொல்ல முயற்சி

லண்டன்:

ண்டனில் இன வெறுப்பு காரணமாக  இந்திய வம்சாவழி குடும்பத்தினரை எரித்து கொல்ல முயற்சி நடைபெற்றது. அதிர்ஷ்டவமாக இந்திய குடும்பத்தினர் அந்த சம்பவத்தில் இருந்து தப்பினர்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் ஆர்பிங்டன் பார்க்உட் பார்க் பகுதியில் வசித்து வருபவர் மயூர் கார்லேகர். இந்திய வம்சா வழியை சேர்ந்த இவரை மேக் கார்லேகர் என்று அழைப்பது வழக்கம். இவரது மனைவி பெயர் ரீத்து. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற கடந்த சனிக்கிழமை இரவு அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தேபோது, வீட்டுக்கு இங்கி லாந்து நாட்டை சேர்ந்த  இளைஞர்கள் கும்பல் ஒன்ற தீ வைத்தது. தீ கார்லேகர் வீட்டின் வெளிப்பகுதியில் திகுதிகுவென எரியத்தொடங்கியது.

இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக  அவர்களை எழுப்பி அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து தீயை அணைத்தனர்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மயூர் கார்லேகர் குடும்பத்தை இன வெறுப்பு காரணமாக உயிரோடு எரித்து கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கூறிய  கார்லேகர், அக்கம்பக்கத்தினர்  சரியான நேரத்தில் எங்களை எழுப்பியதால் அதிர்ஷ்டவச மாக உயிர் தப்பினோம்.   நாங்கள் யாருக்கும் எந்த தீங்கும் செய்தது கிடையாது. வாழ்நாளில் எல்லோருக்கும் உதவிகள் செய்து வந்திருக்கிறோம். இந்த சம்பவம் எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்து உள்ளது” என்று கூறினார்.

மயூர் கார்லேகர், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை அடுத்த தானே டோம்பிவிலி பகுதியை சேர்ந்தவர். 1990ம் ஆண்டுக்கு பின்னர் லண்டனுக்கு குடும்பத்துடன் சென்று குடியேறினார்.  லண்டனில் உள்ள நிறுவனம் ஒன்றில் டிஜிட்டல் ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

இந்த சம்பவம் அங்கு வாழும் இந்தியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.