கேரளாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு ஸ்டெம் செல் தானம் தேடும் பெற்றோர்…

மெரிக்காவில் வசித்து வரும் கேரளாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணுக்கு, நோயின் பாதிப்பு காரணமாக  ஸ்டெம் செல் தானம் கேட்டு அவரது பெற்றோர் நன்கொடையாளர்களை தேடி வருகின்றனர்.

அரியவகை லுக்கிமியா வகை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள்  புதிய ஸ்டெம்செல் மூலம் மட்டுமே  குணமாக்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. . Leukaemia என்பது ரத்தம் அல்லது எலும்பு மஜ்ஜையில் உருவாகும் ஒருவகையான புற்றுநோயாகும். இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் ஸ்டெம்செல் வகையிலான புதிய ஸ்டெம்செல் பொருத்தி அவர்களை காப்பாற்றும் வகையில் நோய் பாதித்த பலர் ஸ்டெம்செல் தானம் கேட்டு வருகின்ற னர்.

இந்த நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த லைனா அன்வர் எனும் பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் இந்தியாவில் ஸ்டெம்செல் தானம் கேட்டு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

‘லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்’ செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணியாற்றி வரும்,  லைனா அன்வருக்கு  Acute Myeloid Leukaemia எனும் தீவிர லுக்கிமியா  (Leukaemia) புற்றுநோய் பாதிக்கப்பட்டு இருப்பது  கடந்த ஆண்டு இறுதியில் தெரிய வந்தது. இதற்காக கீமோதெரபி உள்பட பல்வேறு சிகிச்சைகளை அவர் மேற்கொண்டு வந்த போதிலும், ரத்த ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை மூலமே இதனை சரி செய்ய முடியும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், லைனா அன்வருக்கு ஏற்ற ஸ்டெம்செல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட வருகிறது. ஏற்கனவே பதிவு செய்துள்ள 19 மில்லியன் நன்கொடையாளர்களின்  ஸ்டெம்செல் அவருக்கு பொருந்தவில்லை. இதன் காரணமாக, அவருக்க ஸ்டெம்செல் தானம் கேட்டு இந்தியாவில் நன்கொடையாளர்களை தேடி வருகின்றனர்.

லைனா அன்வர் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர் என்பதால், அவருக்கு இந்தியர்களின் ஸ்டெம்செல் ஒத்துப்போகும் என்று நம்பப்படுகிறது. தற்போது லைனா அன்வர் அவரது குடும்பத்தினர், தற்போது இந்தியாவில் அவருக்கு ஏற்ற ஸ்டெம்செல்களை தேடி வருகின்றனர்.

லைனா அன்வரின் பெற்றோர்கள் ஹைதராபாத் மற்றும் கேரளாரவை  பூர்வீகமாக கொண்ட வர்கள். அவர்களுடைய உறவினர்கள் பலர ஆந்திராவிலும்,  கேரளாவிலும் உள்ளனர். எனவே, இந்த இரு மாநிலங்களிலும் இந்தியாவில் செயல்படும் தாத்ரி எனும் எலும்பு மஜ்ஜை/ஸ்டெம்செல் பதிவகத்தின் துணையோடு அவர்கள் தேடி வருகின்றனர்.

தாயின் கருப்பையில் உருவாகும் ஒரு ஸ்டெம் செல்லிலிருந்துதான் நம் உடலின் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. ரத்தம், கருமுட்டை, தொப்புள்கொடி, நச்சுக்கொடி, தொப்புள்கொடி ரத்தம், மாதவிலக்கு ரத்தம், எலும்பு மஜ்ஜை, தசை, தோல், கொழுப்புத் திசு, கல்லீரல், கணையம், மூளை போன்றவற்றில் ஸ்டெம் செல்கள் ஏராளமாக உள்ளன. இவற்றைப் பிரித்துப் பாதுகாத்து பலதரப்பட்ட புற்றுநோய்கள் உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கப் பயன்படுத்தலாம்.

ஸ்டெம் செல் சிகிச்சை தனித்தன்மை வாய்ந்தது. இந்த செல்களை எந்த உறுப்புக்கு அனுப்புகிறோமோ, அந்த உறுப்பாகவே அவை வளர்ந்துவிடும். இதனால், உடலில் பாதிப்படைந்த உறுப்பு சீராகிவிடும். எலும்பு மஜ்ஜை அல்லது தொப்புள்கொடி ரத்தம் மூலம் ஸ்டெம் செல்களைப் பெற்று சிகிச்சைக்குப் பயன்படுத்துவது தற்போது நடைமுறையில் உள்ளது.

ஏற்கனவே  இங்கிலாந்தை சேர்ந்த  ஆஸ்கர் சஷெல்பை-லீ (Oscar Saxelby-Lee) என்ற 5வயது  சிறுவனுக்கு சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஸ்டெம்செல் தானம் கொடுக்க முன் வந்தது குறிப்பிடத்தக்கது.