வாஷிங்டன்: கொரோனா நோய் பரவுவதை தடுக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய  சமுக இடைவெளியை,  ‘பீப்’ ஒலியுடன் அடை­யாளம் காட்­டும் தொப்பியை அமெரிக்காவைச் சேர்ந்த இந்­திய வம்­சா­வளி சிறுமி கண்­டு­பி­டித்துள்ளார். அமெ­ரிக்­காவில் நடந்த இளம் விஞ்­ஞானி நிகழ்ச்­சி யில் இது அறி­மு­கம் செய்யப்பட்டது. பெரும் வரவற்பை பெற்றுள்ளது.

உல­க நாடுகளை அச்­சு­றுத்திக் கொண்­டி­ருக்கும்  கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை இரண்டரை கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எட்டரை லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் வசித்து வரும்   இந்­திய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த 15 வய­து பள்ளி மாணவி நேகா ஷுக்லா, அறி­வியல் தொழில்­நுட்ப யுக்­தியில் புதிய தொப்பி ஒன்றை கண்­டு­பிடித்துள்ளார்.

இந்த தொப்பியை அணிந்திருப்பவரிர் பக்கத்தில், அதாவது கொரோனா சமூக விலகலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 6 அடி தூரத்தை கிடைபிடிக்காமல், அருகே வந்தால், தொப்பியில் இருந்து பீப் பீப் ஒலியையும், அதிர்வையும் ஏற்படுத்தி, தொப்பி அணிந்திருக்கும் நபரை  எச்சரிக்கும். இதனால், மற்றவர்களிடம் இருந்து விலகி சென்று விடலாம்.

உலக நாடுகள் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியுடன், பொதுஇடங்களில், ஒருவருக் கொருவர், குறைந்­தது 6 அடி இடை­வெளியுடன்  இருக்க வேண்டும் என்று  வலியுறுத்தி வரும் நிலையில், இந்த எச்சரிக்கை தொப்பி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

பொறி­யியல் மற்றும் தொழில்­நுட்­பத்தில் தனி ஆர்­வமும் அக்­க­றையும் கொண்­டி­ருக்கும் நேகா, இந்த சாத­னத்தை கண்­டு­பி­டிக்கும் முயற்­சியில் கடந்த  ஏப்ரல் மாதம் இறங்­கியதாகவும், அவரது   கடின உழைப் பின் முடிவில் இந்த தொப்­பி­யை வெற்­றி­க­ர­மாக வடி­வ­மைத்துள்ளார்.

இவரது கண்டுபிடிப்பு, அமெ­ரிக்­காவில் நடை பெற்ற இளம் விஞ்­ஞா­னிகள், திற­மை­சா­லிகள் அறி­முகம் என்னும் நிகழ்ச்­சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது, தொப்பி யின் செயல்விளக்கத்தை செய்து காட்டி அசத்தினாள்.

இது பார்­வை­யா­ளர்­களின் பாராட்­டையும், வர­வேற்­பையும் பெற்­ற­து.

இந்த கண்டுபிடிப்பு குறித்து கூறிய நேகா,  இந்தத் தொப்­பியின் உள்ளே அல்ட்­ரா­சோனிக் சென்சார், மைக்­ரோப்­ராசசர், பஸ்சர், 9 வோல்ட் பேட்­டரி ஆகி­யவை உள்­ளன. பொது­ இடங்­களில் நடந்து போகி­ற­போதோ அல்­லது கூடி­யி­ருக்­கி­ற­போதோ நமக்கு முன்னே இருப்­ப­வர்­க­ளுக்கும் நமக்கும் இடையில் 6 அடி தூரம் இருப்­பதைக்காட்­ட இந்தத் தொப்பி லேசான அதிர்வை உண்­டு­பண்ணும். பீப்… பீப்… பீப்… என்னும் ஒலி­யை எழுப்பி எச்சரிக்கும் என்றார்.

இந்த சமூ­கத்­துக்கு பய­னுள்ள விதத்தில் எதை­யா­வது கண்­டு­பி­டிக்க வேண்­டு­மென்று உந்­து­தலின் வெவெப்­பாடே இந்த ‘சிக்ஸ் ஃபீட் அபார்ட்’ அலாரம் கேப் – அதா­வது 6 அடி விலகல் உஷார் படுத்தும் தொப்­பி என்று சிரித்துக் கொண்டே சொல்­கி­றாள். அறி­வியல் மட்­டு­மல்ல இசை­யிலும் எனக்கு பேரார்வம் என்று சொல்லும் நேகா, பல ஆண்­டு­க­ளாக பியா­னோவும், கிதாரும் வாசித்து வரு­கிறாள். என் அறி­வியல் திற­மையைப் பயன்­ப­டுத்தி எதிர்­கா­லத்தில் சிறந்த தொழில்முனை­வ­ரா­கவே ஆசை என்­கி­றாள்.

நேகா,  பெனிசுலா நாட்டில் மெக்­கா­னிக்ன் பர்க் நகரில் உள்ள கம்­பர்லாண்ட் வேலி ஹை ஸ்கூலில் பள்ளி படிப்பு படித்து வருகிறார். பல்­வேறு அறி­வியல் போட்­டி­களில் பங்­கேற்று பல பரி­சு­களை, விரு­து­களை வென்றுள்ளவர்,  அறி­வியல், தொழில்­நுட்பம், பொறி­யியல் மற்றும் கணக்கு பாடங்­களில் தனி ஆர்வம் காட்டி வருகிறார்.  எழுத்­தாளர், பேச்­சாளர் என்று பன்முகம் கொண்டவர் நேகா.