இங்கிலாந்தில் அந்நாட்டுப் பிரதமரை விட அதிகரித்து வரும் இந்தியரின் புகழ்

ண்டன்

ந்திய வம்சாவளி அமைச்சரான ரிஷி சுனக் (இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி மருமகன்) இன்  புகழ் அந்நாட்டுப் பிரதமரை விட அதிகரித்துள்ளது.

இங்கிலாந்தில் பிரதமர் உட்பட அனைத்து பிரபலங்களின் புகழ் குறித்துக் கிட்டத்தட்ட வாரத்துக்கு ஒருமுறை யுகுவ் என்னும் அமைப்பு கணக்கெடுப்பு நடத்துவது வழக்கமாகும்.  அந்த கணக்கெடுப்பில் அந்நாட்டுப் பிரதமர் போர்ஸ் ஜான்சன் தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகிறார்.  கடந்த இரு வாரங்களுக்கு முன்பு அவருடைய புகழ் பூஜ்ஜியத்தை விடக் குறைந்து எதிர்மறையில் இறங்கியது

தற்போதைய நிலவரப்படி பிரதமர் போரிஸ் ஜான்சன் எதிர்மறையில் இருந்து மேலேறி 20 மதிப்பெண்களில் உள்ளார்.  ஆனால் இந்திய வம்சாவளி அமைச்சரும் இன்ஃபோசிஸ் நாரயாணமூர்த்தியின் மருமகனுமான ரிஷி சுனக் பிரதமரை விட அதிக புகழில் உள்ளார்.   சுமார் 39 வயதாகும் ரிஷி சுனக் கடந்த மாதம் அமைச்சரானதில் இருந்தே தொடர்ந்து அதிக அளவில் மதிப்பெண் பெற்று வருகிறார்.

ரிஷி சுனக் அமைச்சரானதில் இருந்து பொருளாதரத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வந்துள்ளார்.  அதில் முக்கியமானது கொரோனா முன்னெச்சரிக்கையால் பணி செய்ய முடியாமல் போன தொழிலாளர்களுக்கு அரசு 80% கூலியை அளிக்கும் என்பதாகும்   இதனால் அவருடைய புகழ் தொடர்ந்து மேலோங்கி வருகிறது. நாட்டின் முக்கியமான பிரச்சினையில் ரிஷி சுனக் எடுத்த முடிவே அவருடைய புகழ் ஓங்கி வருவதற்கு காரணம் என யுகோவ் தெரிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி