சென்னை

லகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் தமிழகத்தில் கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசல் விலை மாற்றமின்றி உள்ளது.

உலகெங்கும் கொரோனா தொற்றால் அனைத்து தொழிற்சாலை நடவடிக்கைகள், போக்குவரத்து உள்ளிட்டவை அடியோடு முடங்கி உள்ளன.  இதனால் கச்சா எண்ணெய் தேவை குறைந்து விலையில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது.  சில தினங்களுக்கு முன்பு கச்சா எண்ணெய் எதிர்மறையில் சரிந்து வாங்குவோருக்குப் பணம் அளிக்கும் நிலையை அடைந்தது.

ஆனால் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை.  குறிப்பாகத் தமிழகத்தில் இந்த மாதம் 3 ஆம் தேதி பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டல் வரி  28லிருந்து 34% ஆகவும் டீசலுக்கு 20லிருந்து 25% உயர்த்தப்பட்டது.   இதனால் பெட்ரோல் விலை அன்று லிட்டருக்கு ரூ.3.25 மற்றும் டீசல் விலை ரூ.2.50 என உயர்ந்தது.

அதன்பிறகு கடந்த 25 நாட்களாக பெட்ரோல் டீசவ் விலை மாற்றமின்றி உள்ளது.  தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.75.54 எனவும் டீசல் லிட்டருக்கு ரு.68.22 எனவும் விற்பனை செய்யப்படுகிறது.  கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தும் அதன் பயன் தங்களுக்குக் கிடைக்கவில்லை எனப் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.