பிரிட்டன் ரூபாய் நோட்டில் இந்தியவிஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ் படம் பொறிக்க பரிந்துரை

லண்டன் :

பிரிட்டன் ரூபாய் நோட்டில் இந்தியவிஞ்ஞானி  ஜகதீஸ் சந்திரபோஸ் படம் மற்றும் அவரது பெயர் பொறிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், புதிதாக வெளியிடப்பட உள்ள 50 பவுண்டு ரூபாய் நோட்டில், பிரபல இந்திய விஞ்ஞானியான சர் சுகதீஷ் சந்திரபோஸ் பெயருடன் படத்தையும் பொறிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது,

இந்திய இயற்பியல் விஞ்ஞானியான சர் ஜகதீஷ் சந்திர போஸ், தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய அறிவியலாளர். லண்டனில் இருக்கும்போது போஸ் தாவரவியல், விலங்கியல் ஆகியவற்றில் ஆர்வம் காட்டினார்; ஆனால் அவர் பி.எஸ்சி இல் அறிவியலும், மருத்துவமும் படித்து வந்தார். இந்நிலையில் லண்டனில் லார்ட் ரிலே (Lore Rele) என்ற அறிவியல் அறிஞரின் தொடர்பு போஸுக்குக் கிடைத்தது. அவருடைய வழிகாட்டுதலின் துணையோடு தாவரங்களைப் பற்றி லண்டனில் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தார்.

பிரிட்டனின் அறிவியல் வளர்ச்சிக்கு உதவிய விஞ்ஞானியின் பெயர் மற்றும் படத்தை ரூபாய் நோட்டுகளில்  வெளியிட  அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான பெயர்களை பரிந்துரைக்கும்படி, அரசு கோரியிருந்தது. இந்த நிலையில், ஏராளமானோர் ஜகதீஷ் சந்திரபோஸ் பெயரை பரிந்துரைத்துள்ளனர்.

இந்த நிலையில், ஜகதீண் சந்திரபோசை  கவுரவிக்கும் வகையில், பிரிட்டன், விரைவில் வெளியிட உள்ள , 50 பவுண்டு மதிப்புள்ள நோட்டுகளில் அவரது  பெயர், படம் இடம்பெற உள்ளது.