நாக்பூர்:

டி 20 போட்டிகளில் 2500 ரன்களை கடந்து, உலகின்  முதல் கிரிக்கெட் வீரர்  என்ற சாதனையை பெற்றுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா.

நேற்று நாக்பூரில்  நடைபெற்ற வங்கதேசத்துடனான 3வது டி20போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளரான  தீபக் சாஹர் தனது அபாத வந்து வீச்சு திறமையால், 3ஓவரில், 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னதாக, ராஜ்கோட்டில் நடைபெற்ற போட்டியின், 48 ரன்கள் எடுத்த போது, ரோகித்சர்மான 2500 ரன்களை கடந்தார். இது உலக சாதனையாக கருதப்படுகிறது. இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் 2,500 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார் ரோகில். அவர்  இதுவரை 100 போட்டிகளில் 2,537 ரன்கள் எடுத்துள்ளார்.

ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இரண்டாவது டி 20 போட்டியில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் வென்ற ஆட்டத்தைத் தொடர்ந்து, 2500 ரன்களை கடந்த வீரர் என்ற வரலாற்று சாதனையைப் பெற்ற  ரோஹித் சர்மா சாதனை புத்தகங்களிலும் இடம்பிடித்தார்.

டி20 போட்டிகளில் குறுகிய காலத்தில் சர்வதேச அளவில் 2500 ரன்களை கடத்து சாதனை படைத்த முதல் வீரர் என்ற சாதனைக்கு ரோகித் சர்மாக சொந்தக்காரரானார்.

டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சாதனையாளர்கள் யார்?  யார்?

இந்திய வீரரான ரோகித் சர்மா 92 இன்னிங்ஸ்களில்  2537 ரன்கள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.

2வது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி 67 இன்னிக்சில் 2450 ரன்கள் எடுத்துள்ளார்.

3வது இடத்தில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் 79 இன்னிங்சில் 2386 ரன்கள் எடுத்துள்ளார்.

4வது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக் 104 இன்னிங்ஸ் விளையாடி 2263 ரன்கள் எடுத்துள்ளார்.

5வத இடத்தை நியூசிலாந்து வீரர் பிரென்டர் மெக்குலம் 70 இன்னிங்சில் 2140 ரன்கள் பெற்றுள்ளார்.