லண்டன் ஓவியரை மணந்த பிரபல வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே..!

லண்டன்: இந்தியாவின் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலும், பிரபல வழக்கறிஞருமான ஹரிஷ் சால்வே, லண்டனைச் ச‍ேர்ந்த ஓவியர் கரோலின் ப்ரோஸாடை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

தற்போது 65 வயதாகும் ஹரிஷ் சால்வே, 56 வயதாகும் கரோலினை லண்டனிலுள்ள ஒரு சிறிய தேவாலயத்தில் வைத்து திருமணம் செய்துகொண்டார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, இந்த எளிய திருமணத்தில் கலந்துகொண்டோர் எண்ணிக்கை 15 மட்டுமே.

இத்திருமணத்தில், Zoom செயலி வாயிலாக இந்திய தொழில் ஜாம்பவான்களான லஷ்மி மிட்டல் மற்றும் முகேஷ் அம்பானி ஆகியோர் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

லண்டனின் நடந்த ஒரு ஓவியக் கண்காட்சியில் சந்தித்துக் கொண்ட ஜோடிகள் இருவரும், கடந்த ஓராண்டுகளாக உறவில் இருந்துள்ளனர். இந்தாண்டு ஜூன் மாதம்தான், தனது 38 வயது மனைவியிடமிருந்து விவாகரத்துப் பெற்றார் ஹரிஷ் சால்வே.

இவருக்கு ஏற்கனவே 2 மகள்கள் உள்ளனர். இவரின் புதிய மனைவி கரோலினுக்கும், அவரின் முந்தைய திருமணத்தின் மூலம் 18 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான சால்வே, குல்புஷன் ஜதாவ், ரத்தன் டாடா, வோடபோன், ஐடிசி ஹோட்டல்கள் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் ஆஜரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

You may have missed