கொல்கத்தா

ந்திய தபால் துறை இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை ஜுலான் கோஸ்வாமியின் படத்துடன் தபால் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளது.

இந்தியப் பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தொடர்ந்து பெண்கள் கிரிக்கெட் உலகில் சாதனைகள் புரிந்து வருகின்றனர்.    அந்த வரிசையில்  கொல்கத்தாவை சேர்ந்த ஜுலான் கோஸ்வாமி சமீபத்தில் ஒரு சாதனை நிகழ்த்து உள்ளார்.   பெண்களுக்கான ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் அவர் தனது 200ஆவது விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.

அவரது இந்த சாதனையை பாராட்டி இந்திய தபால் துறை அவர் படத்துடன் கூடிய தபால் தலை ஒன்றை வெளியிட்டு கௌரவித்துள்ளது.   கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கொல்கத்தா விளையாட்டுப் பத்திரிகையாளர்கள் சங்க அரங்கில் இந்த தபால் தலை வெளியிட்டு விழா நடை பெற்றுள்ளது.    இந்த விழாவில் முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் சௌரவ் கங்குலி கலந்துக் கொண்டுள்ளார்.

இந்த தபால் தலையில் ஜுலான் கோஸ்வாமியின் புகைப்படத்துடன் அவர் சொந்த மாநிலமான மேற்கு வங்கத்தை குறிக்க்ம் வகையில் கொல்கத்தா விக்டோரியா நினைவு மண்டபத்தின் படமும் சேர்க்கப்பட்டுள்ளது.

தற்போது 35 வயதாகும் ஜுலான் கோஸ்வாமி கடந்த 2007 ஆம் வருடம் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதைப் பெற்றவர் ஆவார்.   பெண்கள் கிரிக்கெட்டில் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 200 விக்கெட் வீழ்த்திய முதல் வீராங்கனை என்ற  புகழும் இவருக்கு உண்டு