ஐபிஎல்2019: பரபரப்பான சூப்பர் ஓவரில் ஐதராபாத்தை வீழ்த்தியது மும்பை!

மும்பை:

பிஎல் தொடரின் நேற்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் இரு அணிகளும் சமமான ஸ்கோர் எடுத்தி நிலையில், சூப்பர் ஓவர் கொடுக்கப்பட்டது.

இதில் அதிரடியாக ஆடிய மும்பை அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தி,  அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

ஐ.பி.எல். தொடரின் 51வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது.  ‘டாஸ்’ ஜெயித்த மும்பை கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஐதராபாத் பந்துவீச சென்றனது.

மும்பையின் தொடக்க ஆட்டக்காரர்களாக  ரோகித் சர்மாவும், குயின்டான் டி காக்கும் களம் இறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்தில் அதிரடி காட்டிய ரோகித்  முதல் 2 ஓவர்களில் 5 பவுண்டரி விளாசினார். ஆனால், அவர் தொடர்ந்து அதிரடியாக ஆடமுடியாதவாறு, ரோகித்தின்  ஆட்டத்தை ஐதராபாத் பவுலர்கள் கட்டுப்படுத்தினர்.  இந்த நிலையில், 18 பந்தில்  24 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ஆனால், குயின்டான் டி காக் நிதானமாக நிலைத்து நின்று விளையாடி வந்தார். இருந்தாலும் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து  வெளியேறி வந்தன. ஐதராபாத் சுழற்பந்து பவுலர்களான ரஷித் கானும், முகமது நபியும் தங்களது மிரட்டலான பந்து வீச்சு மூலம் முப்பை பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்தனர். இந்த நிலையில்,  சூர்யகுமார் யாதவ் 23 ரன்னிலும், இவின் லீவிஸ் ஒரு ரன்னிலும், ஹர்திக் பாண்ட்யா 18 ரன்னிலும், பொல்லார்ட் 10 ரன்னிலும் வெளியேறினர். இதற்கிடையே டி காக் அரைசதத்தை கடந்தார்.

இதன் காரணமாக மும்பை அணி  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை அணி 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. குயின்டான் டி காக் 69 ரன்களுடனும் (58 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), குருணல் பாண்ட்யா 9 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி ஆடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விருத்திமான் சஹா, கப்தில் களமிறங்கினர். சஹா 25 ரன் எடுத்த நிலையில் வெளியேறி,  கப்தில்லும் 15 ரனில் வெளியேறினார்தொடர்ந்து,  கேப்டன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்த்த நிலையில் எல்பிடபிள்யு ஆகி 3 ரன்னில் வெளியேறியது ஐதராபாத் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து களமிறங்கிய தமிழக வீரர்  விஜய் சங்கர் 12 ரன்னிலும்,  அபிஷேக் ஷர்மா 2 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியை கொடுத்தனர்.

இந்த சோகமான சூழ்நிலையிலும், மனிஷ் பாண்டே நிலைத்து நின்று ஆடி அணியின் சரிவை ஈடுகட்டி வந்தார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 17 ரன் தேவைப்பட்ட  நிலையில், மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சன் ரைசர்ஸ் வெற்றிபெறுமான பலத்த எதிர்பார்ப்பு நிலவியது. ஹர்திக் பாண்ட்யா பந்துவீசத் தொடங்கினார். முதல் 2 பந்தை சராசரியாக அடித்த மனிஷ், நபி இணை, 3வது பந்தை நபி சுழற்றி அடித்தார். அது சிக்சருக்கு சென்றது. ஆனால் துரதிருஷ்டவசமாக அடுத்த பந்தில் அவர் கேட்ச் ஆகி வெளியேற மீதம் 2 பந்துகள் மட்டுமே இருந்தது. தொடர்ந்து பாண்ட்யா வீசிய 5 பந்தில் ல் மனிஷ் பாண்டே 2 ரன் எடுக்க, கடைசி பந்தில் 7 ரன் தேவை ஏற்பட்டது. இந்த நிலையில் 6வது பந்தையும்  பந்தை மனிஷ் பாண்டே சிக்சராக்கி ஆட்டத்தை சமனுக்கு (டை) கொண்டு வந்தார்.

இதனால், ஐதராபாத் அணி   20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்களில் நின்றது. மனிஷ் பாண்டே 71 ரன்களுடன் (47 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார்.

ஆட்டம் சமன் ஆனதால் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப் பட்டது.

சூப்பர் ஓவரில் முதலில் ஐதராபாத் பேட் செய்தது. பும்ரா பவுலிங் செய்தார். இதில் 4 பந்தில் 2 விக்கெட்டையும் பறிகொடுத்த ஐதராபாத் 8 ரன் எடுத்தது.

தொடர்ந்து 9 ரன் இலக்கை நோக்கி மும்பை அணி ஆடியது. ஐதராபாத் தரப்பில் சூப்பர் ஓவரை சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் வீசினார்.

முதல் பந்தை எதிர்கொண்ட ஹர்திக் பாண்ட்யா சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் அவர் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தில் பொல்லார்ட் 2 ரன் எடுத்து மும்பையின் வெற்றியை உறுதி செய்தனர்.

8-வது வெற்றியை பெற்ற மும்பை அணி 3-வது அணியாக அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) நுழைந்தது.

அதே சமயம் 7-வது தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கடைசி லீக்கில் பெங்களூரை வீழ்த்த  வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.