பிலிப்பைன்ஸ் : மணிலாவில் காந்தி சிலையைத் திறந்து வைத்த இந்திய ஜனாதிபதி

ணிலா

ந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி சிலையை திறது வைத்துள்ளார்.

இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் 5 நாள் அரசுமுறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்குச் சென்றுள்ளார்.  பயணத்தில் முதல் கட்டமாக பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சென்றடைந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.   ராம்நாத் கோவிந்த் பிலிப்பைன்ஸ் அதிபரைச் சந்தித்து இருநாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினார்.  அதைத் தொடர்ந்து இரு நாடுகளிடையே சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 35 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துரையாடி உள்ளார்.. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் இன்று மகாத்மா காந்தியின் மார்பளவுச் சிலையைத் திறந்து வைத்தார்.     மணிலாவில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த காந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி ராநாத் கோவிந்த் அடுத்ததாக பிலிப்பைன்ஸ் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு டோக்கியோ சென்று ஜப்பானின் புதிய மன்னரின் முடிசூட்டு விழாவில் பங்கேற்கவுள்ளார்.  அதன் பிறகு டோக்கியோவில் உள்ள புத்த கோவிலுக்குச் செல்லும் ஜனாதிபதி அங்கு ஒரு போதி மரத்தையும் நட உள்ளார். வரும் 22 ஆம் தேதி தனது ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இந்தியா திரும்புகிறார் என தெரிய வந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி