சென்னை

றக்கும் ரெயிலில் பலாத்காரம் செய்யப்பட இருந்து பென்ணை காப்பாற்றிய ரெயில்வே பாதுகாப்புப் படை காவலருக்கு ரெயில்வேத் துறை ரூ. 1 லட்சம் பரிசு அளிக்க உள்ளது.

சென்ற மாதம் 22 ஆம் தேதி இரவு வேளச்சேரியில் இருந்து சென்றுக் கொண்டிருந்த பறக்கும் ரெயிலில் சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையம் அருகே வந்த போது ஒரு பெண் கூச்சலிடும் சத்தம் கேட்டது.    அந்த பெட்டி அருகில் உள்ள பெட்டியில் வந்துக் கொண்டிருந்த ரெயில்வே காவல்படை வீரரான சிவாஜி என்பவர் அடுத்த ரெயில் நிலையாமான பார்க்டவுன் ரெயில் நிலையத்தில் சத்தம் வந்த பெட்டிக்கு சென்றார்.

அங்கு ஒரு பெண்ணை ஒருவர் பலாத்காரம் செய்வதைக் கண்ட அவர் அந்த நபரை தாக்கி அந்தப் பென்ணை காப்பாற்றினார்.   பலாத்காரம் செய்ய முற்பட்ட நபரை கைது செய்தார்.   அந்தப் பெண் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.   மருத்துவமனையில் அவரை நலம் விசாரித்த காவல்துறை அதிகாரி சிவாஜியின் வீரத்தை பாராட்டி ரூ.5 ஆயிரம் பரிசளித்தார்.

தற்போது இந்திய ரெயில்வேத் துறை ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   அதில்  ஓடும் ரெயிலில் பெண்ணின் மானத்தை காத்த காவலர் சிவாஜிக்கு ரெயில்வே நிர்வாகம் பாராட்டு தெரிவிக்கிறது.   அவர் தைரியத்தையும் கடமை உணர்வையும் பாராட்டி ஆவருக்கு மத்திய அமைச்சரின் பதக்கமும் ரூ. 1 லட்சம் ரொக்கப்பரிசும் அளிக்கப்படும் என அறிவிக்கப் பட்டுள்ளது.