ரெயில்வே நேரடி டிக்கட் விற்பனை படிப்படியாக நிறுத்தம் : 63000 பேர் வேலை இழப்பு

சென்னை

ரெயில் நிலையங்களில் நேரடி டிக்கட் விற்பனை செய்வதை படிப்படியாக நிரிவாகம் நிறுத்த உள்ளதால் 63577 பேர் வேலை இழக்கும் அபாயம் உண்டாகி இருக்கிறது.

தென்னக ரெயில்வே ஊழியர்கள் சங்க மாநில துணைச் செயலாளர் மனோகரன்.   இவர் செய்தியாளர்களை சந்தித்தார்.   அந்த சந்திப்பில் ரெயில்வே நிர்வாகம் எடுத்துள்ள சில நடவடிக்கைகளால் பல ஊழியர்கள் பணி இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மனோகரன், “கடந்த 2006 ஆண்டு முதல் ரெயில் நிலையம் உள்ளேயும் வெளியேயும் டிக்கட் சேவாக்குகளையும் முகவர்களையும் நிர்வாகம் அனுமதித்துள்ளது.   அவர்கள் முன்பதிவு இல்லாத டிக்கட்டுகலை விற்பனை செய்து வந்தனர்.   இவ்வாறு  தென்னக ரெயில்வேயில் 102 சேவாக்குகளும் 90 முகவர்களும் உள்ளனர்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் புறநகர் அல்லாத ரெயில் நிலையங்களிலும் புறநகர் ரெயில் நிலையங்களிலும் பல நிலையங்களில் டிக்கட் கவுண்டர்களை நிர்வாகம் நீக்கி உள்ளது.   இதன் மூலம் இந்தியாவில் உள்ள 720 நிலையங்களில் டிக்கட் கவுண்டர்கள் நீக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் தேதி நடந்த அதிகாரிகள் கூட்டத்தில் ரெயில்வே டிக்கட் விற்கும் சேவாக்குகளுக்கு அளிக்கப்படும் கமிஷன் தொகையை ரு. 2 ஆக உயர்த்தி அறிவிக்கப்பட்டது.  இதனால் வெளியில் டிக்கட் வாங்கும் போது பயணிகள் ரூ.2 கூடுதலாக செலுத்த வேண்டி வரும் நிலை உ ந்டாகும்.

அத்துடன் அனைத்து ரெயில் நிலையங்களிலும்  படிப்படியாக முன்பதிவு இல்லாத டிக்கட் கவுண்டர்களை குறைத்து தனியார் முகவர்கள் அல்லது சேவாக்குகளை அமர்த்த நிர்வாகம் எண்ணி உள்ளது.  இதனால் 63577 பேர் வேலை இழப்பார்கள்.  இவர்கள் மாற்றுப்பணிக்கு அனுப்பப் படுவார்கள் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

அப்படியானால் அந்த மாற்றுப் பணிகளுகு தேவையான ஆள் எடுக்கப்பட மாட்டாது என்பதும்  இருக்கும் ஊழியர்களை வைத்தே நிர்வாகம் பணிகளை தொடரும் என்பதும்  தெளிவாகிறது.   இது ரெயில்வே துறையின் மபெரும் ஆட்குறைப்பு நடவடிக்கையாகும்.   இதனால் பயணிகளும் கடும் துயர் அடைவார்கள்.   இந்த திட்டத்தை உடனடியாக ரெயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும்” என கூறி உள்ளார்.