டில்லி

யில்களை இயக்குவது குறித்த விண்ணப்பத்துக்கு முந்தைய கூட்டத்தில் 23 தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

இந்திய பொதுத் துறைகளில் மிகப் பெரியதான ரயில்வேத் துறையில் தனியார் பங்களிப்பை உண்டாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.    இந்த அடிப்படையில் நாடெங்கும் 100க்கும் மேற்பட்ட தடங்களில் தனியார் ரயில் இயக்கப்பட உள்ளது.   இந்த தடங்கள் அதிக போக்குவரத்து உள்ளதும் நல்ல வருவாய் அளிக்கக்கூடியதும் ஆகும்.

இவ்வாறு தனியார் ரயில்களை இயக்க விண்ணப்பிக்க உள்ள நிறுவனங்களுக்காக முன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகின்றன.  கடந்த ஜூலை மாதம் 21 ஆம் தேதி நடந்த கூட்டத்தில் 16 நிறுவனங்கள் கலந்துக் கொண்டன.   இதையடுத்து விண்ணப்பத்துக்கு முந்தைய 2 ஆம் கூட்டம் நேற்று நடந்துள்ளது.  இதில் 23 தனியார்  நிறுவனங்கள் பங்கு பெற்றுள்ளன.

இந்த கூட்டத்தில் அல்ஸ்டாம் டிாரன்ஸ்போர்ட் இந்தியா, பாம்பராடயர் டிரான்ஸ்போர்ட் இந்தியா, சீமன்ஸ் லிமிட், ஜிஎம்ஆர் கட்டுமானம், 12 பொதுத்துறை நிறுவனங்கள், பிஇஎம்எல், ஐஆர்சிடிசி, பிஹெச்இஎல், ஸ்பெயினின் சிஏஎப் இந்தியா, மேதா குழுமம், ஸ்டெர்லைட், பாரத் போர்ஜ், ஜேகேபி கட்டுமானம், டாடாகார்க் வேகன்ஸ் லிமிட் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்நிறுவனங்கள் ரயில் குறித்த கேள்விகள், பங்கு பெறும் தகுதி, கட்டண நிர்ணயம், செயல்பாடு, பராமரிப்பு, ரயில் நேரம், நிறுத்தங்கள் குறித்த பல கேள்விகளைக் கேட்டுள்ளனர்.  ரயில்வே அதிகாரிகள் மற்று,ம் நிதி அயோக் அதிகாரிகள் இவற்றுக்கு உரிய விளக்கங்களை அளித்துள்ளனர்.

தனியார் நிறுவனங்களுக்கு ரயிலுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க உரிமை உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது  மேலும் பல பணிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.