டில்லி

ந்திய ரெயில்வே வழங்கும் உணவு வகைகளுக்கு விலை ஏற்றியதுடன் கேரள உணவு வகைகள் விற்பனையை  நிறுத்தி உள்ளது.

இந்திய ரெயில்வே பல ரெயில் நிலையங்களில் உணவு விடுதிகள் நடத்தி வருகின்றன.   இந்த உணவு விடுதிகளில் கேரள உணவு வகைகளான அப்பம், பழ பஜ்ஜி, முட்டை கறி, பரோட்டா, தோசை, புட்டு மற்றும் கேரளா கடலைக்கறி ஆகியவை விற்னை செய்யப்பட்டு வந்தது.  இந்த உணவு வகைகளுக்கு தென் இந்தியப் பயணிகளுடன் வட இந்தியப் பயணிகளும் பெருமளவில் விருப்பம் தெரிவித்திருந்தனர்.

தற்போது இந்த உணவு விடுதிகளின் விலைப்பட்டியல்  வெளியிடப்பட்டுள்ளது.  இந்த பட்டியலில் பல உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது.  குறிப்பாகச் சாப்பாட்டின் விலை ரூ.35லிருந்து ரூ. 70 ஆகி உள்ளது. உளுந்து வடை மற்றும் பருப்பு வடை ஆகியவற்றின் விலை  ரூ.8.50லிருந்து ரூ.15 ஆகி உள்ளது.  அதாவது இரு வடைகளின் விலை ரு. 30 ஆகி உள்ள வேளையில் வட இந்திய உணவுகளான ஆலு போண்டா, கச்சோரி, சமோசா போன்றவை இரண்டுக்கு ரூ.20 விலையில் விற்கப்படுகிறது.

அத்துடன் கேரள உணவு வகைகளான அப்பம், பழ பஜ்ஜி, பரோட்டா, முட்டைக் கறி, புட்டு , கேரள கடலைக் கறி உள்ளிட்டவை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.   உளுந்து வடை மற்றும் பருப்பு வடை இடம் பெற்றுள்ள போதிலும் இரு இட்லி வாங்கும் போது இரு வடைகளும் அவசியம் வாங்க வேண்டியது உள்ளது.

இந்த உணவு வகைகளில் தென் இந்திய உணவான மசாலா தோசை, தயிர் சாதம் மற்றும் சாம்பார் சாதம் இணைக்கப்பட்டுள்ளது   அதே வேளையில் அதிக அளவில் வட இந்திய உணவுகள் சேர்க்கப்பட்டுள்ளன.  வட இந்திய உணவுகளான ராஜ்மா சாதம்,சோலா பட்டூரா, பாவ் பாஜி, கிச்சடி, குல்சா போன்றவை இணைக்கப்பட்டுள்ளனா.   எலுமிச்சை பழ ரசமும் இந்த பட்டியலில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.