Random image

டிஜிட்டல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிம அடையாளத்துக்கு ரெயில்வே அனுமதி

டில்லி

ரெயிலில் பயணம் செய்யும் போது டிஜிட்டல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை அடையாளமாக பயன்படுத்த ரெயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

ரெயில்களில் பயணம் செய்யும் போது பயணிகள் அரசு வழங்கிய ஏதாவது ஒரு அசல் அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.  இதில் ஆதார், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமைம் உள்ளிட்டவைகள் அடங்கும்.    இவ்வாறு  அசல் அட்டைகளை பயணத்துக்காக எடுத்துச் செல்லும் போது அவி தொலைந்து விடுகின்றன.

தற்போது டிஜி லாக்கர் எனப்படும் இணயப் பெட்டகங்களில் பலர் இந்த அட்டைகளை ஆவணங்களாக சேமித்து வைத்துள்ளனர்.  இந்த ஆவணங்களை அடையாளமாக காட்ட அனுமதி அளிக்க வேண்டி பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.  இதனால் அசல் அட்டைகள் தொலைவதை தவிர்க்கலாம் என தெரிவித்தனர்.

இதை ஒட்டி ரெயில்வேத் துறை, “டிஜி லாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள டிஜிடல் ஆதார் மற்றும் ஓட்டுனர் உரிமங்களை பயணிகள் தங்கள் பயணத்தின் போது காட்டலாம்.   ரெயில்வே அதிகாரிகள் அதை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளலாம்.   ஆனால் அவை ஆவணங்களாக இல்லாமல் படமாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது” என அறிவித்துள்ளது.