துபாய்:
துபாயில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட இந்தியரின் சமூக வலைதள பக்கம் முடக்கப்பட்டுள்ளது.

துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிப்பதோ அல்லது கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிடுவதோ குற்றமாக கருதப்படும். இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்கள், தங்கள் வேலையை இழப்பதுடன், உடனடியாக சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்நிலையில், துபாயில் வியாபாரத்தை நடத்தி வரும் இந்தியரான சராப் உபதாய். இஸ்லாம் மதத்திற்கு எதிரான கருத்தை தனது சமூக வலை தளத்தில் பதிவு செய்து சிக்கலில் மாட்டியுள்ளார். இதையடுத்து, சராப் உபாத்யாயின் இனையதளம், லிங்கெடின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகள் முடக்கபட்டன.

துபாயில் வசித்து வந்த சராப் உபாத்யாயின், ராக்வெல் நிகழ்வுகள் மற்றும் விற்பனையின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

உபாத்யாயின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் “எச்சில் துப்ப முடியவில்லை என்றால் எப்படி மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ முடியும். 2020 நோன்பில் புதிய முறை கொண்டு வரலாம். கடந்த 1400 ஆண்டுகளில் அவை இன்னும் சிக்கிக்கொண்டிருந்தாலும், பேசப்பட்ட சொற்களை முன்னேற்றுவதையோ அல்லது மாற்றுவதையோ நான் நம்புகிறேன் ” என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் வெளியிட்ட மற்றொரு ட்வீட்டில், “தீவிர இஸ்லாமிய தப்லீகி பயங்கரவாதிகள் மற்றும் சாத்தானின் பிற தீவிர இஸ்லாமிய மகன்களுக்கு மரணம் ஜா உகாத் லெ பிசி ஜோ உகாதேகா (நீங்கள் விரும்பியதைச் செய்யுங்கள்)” என்று எழுதியிருந்தார்.

இவர் பதிவிட்ட டுவிட்டர் பதிவை பார்த்த ஷார்ஜா அரச குடும்பத்தை சேர்ந்த இளவரசி ஹென்ட், அல்-காஸ்மி இந்த பதிவை உடனடியாக நீக்க வேண்டும் என்று எச்சரித்து இருந்தார்.

இந்நிலையில், உபாத்யாயின் இனையதளம், லிங்கெடின் பேஸ்புக் மற்றும் ட்விட்டர் கணக்குகள் முடக்கபட்டன.

இதே போன்று குவைத்தில் பணியாற்றி வந்த பீகாரை சேர்ந்த குண்ட் குமார், பேஸ்புக்கில் பதிட்ட கருத்து இஸ்லாத்தை அவமதிப்பதாகக் இருந்ததை அடுத்த அவர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்ப்பட்டார்

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், இஸ்லாத்தை கேலி செய்ததற்காக 2 இந்தியர்கள் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.