இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவு

மெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று மேலும் 4 காசுகள் சரிந்துள்ளது.

நேற்றும்  இந்திய ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்துள்ள நிலையில் இன்று மேலும் 4 காசுகள் சரிந்து உள்ளது.

வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே டாலரின் தேவை உயர்ந்துள்ளது ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு  ரூ.68.03 ஆகும். கடந்த வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.67.99 ஆக இருந்தது.

கடந்த 14ந்தேதி இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் உயர்ந்த நிலையில், 15ந்தேதி 36 காசுகள் சரிந்தது. அதன்பின்னர் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.