Random image

ரூபாய் மதிப்பு தொடர் சரிவு….டாலருக்கு நிகராக 72.40க்கு வர்த்தகம்

டில்லி:

அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் மதிப்பு இன்று 72.40 என்ற நிலையில் முடிவடைந்தது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழச்சியை சந்தித்து வருகிறது. இதையடுத்து நிதியமைச்சர் அருண்ஜெட்லி, வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ரூபாய் மதிப்பின் தடுமாற்றத்திற்கு தீர்வை ஏற்படுத்தும் வகையிலான சில முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வர்த்தக நேர இறுதியில் டாலருக்கு நிகரான ரூபாயில் மதிப்பு 72.40 என்ற நிலையில் வர்த்தகமானது. வர்த்தகத்தின் போது 72.52 என்ற குறைந்த நிலையை ரூபாய் அடைந்து பின்னர் மீண்டது. இன்று 67 காசுகள் குறைவாக 72.52 என்ற நிலையில் ரூபாய் வர்த்தகம் தொடங்கியது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சி முதலீட்டாளர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.