இந்திய ரூபாய் மதிப்பு உயரத் தொடங்கியது

டில்லி

நேற்று வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்த இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரியத் தொடங்கியது.   ஈரானுடன் எண்ணெய் வர்த்தகத்தை இந்தியா தொடர்ந்தால் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்தது.   இதனால் மேலும் இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தது.   நேற்றைய தினம் டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ.69ஐ எட்டியது வரலாற்றிலேயே முதல் முறையாகும்.

இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து ரூ.70 ஐ தொடலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.  இதை ஒட்டி அமெரிக்க டாலர்கள் கையிருப்பை மேம்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்தது.   அந்த நடவடிக்கையின் பலனாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் உயரத் தொடங்கி உள்ளது.

நேற்று மாலை டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்து 68.79 ஐ அடைந்துள்ளது.