இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் கடும் சரிவு: 70.08 பைசாவாக குறைந்தது

மும்பை:

மெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 27 பைசா சரிவடைந்து 70.08 பைசாவாக குறைந்தது.

ஏற்கனவே கடந்த 14ந்தேதி முதன்முறையாக வரலாறு காணாத அளவில் ஒரு டாலருக்கு ரூ.70.08 ஆக சரிந்த நிலையில் தற்போது மீண்டும் 70.08 பாசை அளவில் சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு ஏறி இறங்கி வரும் நிலையில் இன்று கடுமையான சந்திப்பை எட்டியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 27 பைசா குறைந்தது. இதனால் காலை நேர வர்த்தகத் தில் இந்திய ரூபாய் மதிப்பு 70.08 ஆக சரிவடைந்தது.

துருக்கியின் பொருளாதார சரிவு, அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றம் போன்ற காரணங்களால் இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவடைந்துள்ளது.

நேற்று அமெரிக்க ரிசர்வ் வங்கி தனது கொள்கை முடிவை வெளியிட்ட நிலையில், அமெரிக்க வங்கிகள் வட்டி விகிதங்களை அதிகரிக்க கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.   இதன் காரணமாக இந்திய ரூபாய் கடும் சரிவை சந்தித்துள்ளதாக வர்த்தக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.